தமிழக அரசு சென்னை மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க முடிவெடுத்துள்ளது. தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் 5410 மதுக்கடைகளை நடத்தி வருகிறது. அவற்றின் மூலமாக தினமும் 100 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகி வருகிறது. விற்பனையானது வார விடுமுறை,விசேஷ விடுமுறை நாட்களில் அதிகமாகிறது. திமுக தேர்தல் வாக்குறுதியாக மதுவிலக்கை அமல்படுத்த போவதாக கூறியது.
இதன்படி முதல்வராக ஸ்டாலின் ஆட்சியில் உள்ளார். அதனால் மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதுபற்றி டாஸ்மாக் அதிகாரி ஒருவர் பேசியதாவது, ஒரு வருடத்திற்கு 30,ஆயிரம் கோடி ரூபாய் மேல் வருவாய் தமிழக அரசுக்கு கிடைக்கிறது. அதனால் எத்தனை கடைகளை மூட வேண்டும் என்பது பற்றி ஆலோசனை நடந்து வருகிறது. இவற்றிற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று அவர் கூறியுள்ளார்.