டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திமுக புதுச்சேரியில் போராட்டத்தை புறக்கணித்திருக்கின்றது.
இது போன்ற திமுகவின் இரட்டை வேடத்தை கண்டு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த விவகாரத்தை வைத்து திமுக பிரச்சாரம் செய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தும் அதே நேரத்தில், புதுச்சேரியில் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தை திமுக புறக்கணிக்கிறது. புதுச்சேரியில் காங்கிரஸ் – திமுக இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், இந்த போராட்டத்தை திமுக புறக்கணிக்கிறது. இது கூட்டணி விரிசலை வெட்ட வெளிச்சமாக இருக்கிறது. திமுகவின் இந்த இரட்டை வேடத்தை கண்டு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.