போதைப்பொருள் விற்பனையில் தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் இருந்து போதைப்பொருட்கள் வெளிமாநிலங்கள், நாடுகளுக்கு கடத்தப்படுகின்றன என்றும், கஞ்சா உட்பட பல போதைப்பொருட்கள் தமிழகத்தில் தாராளமாக விற்கப்படுகின்றன.
ஆபரேஷன் கஞ்சா 2.0 வெற்றி என்றால், ஏன் தற்போது ஆபரேஷன் கஞ்சா 3.0 நடவடிக்கையை காவல்துறை தொடங்கியுள்ளது என்று, காவல் துறையை தன்வசம் வைத்திருக்கும் CM ஸ்டாலின் விளக்க வேண்டும். கஞ்சா விற்பனையை அடியோடு ஒழிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.