Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு?…. அமைச்சர் சொன்ன ஷாக் நியூஸ்….!!!!

சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக பொது உறுப்பினர் கூட்டம் தமிழக நகர்புற நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு தலைமையில் நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் நேரு, அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் கட்டுமான பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்தது நிதி ஆதாரத்தை அதிகரிக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருவதாக கூறினார்.மேலும் சூழ்நிலைக்கு ஏற்ப விலைவாசியை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் மக்களை பாதிக்காத வகையில் போக்குவரத்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து முதல்வர் ஸ்டாலின் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தமிழக அரசு பேருந்துகளில் எவ்வளவு கட்டணம் உயரும் என்பது குறித்து உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி புறநகர் சாதாரண (10 கீமி) ஐந்து ரூபாய் முதல் 6 ரூபாய் வரையும், புறநகர் இடைநில்லா பேருந்து (30 கீமி) ரூ.18-27 வரையும், நவீன சொகுசு பேருந்து (30 கீமி) ரூ.21-33 வரையும், விரைவு பேருந்து 17 முதல் 24 ரூபாய் வரையும், குளிர்சாதன பேருந்து 27 ரூபாய் முதல் 42 ரூபாய் வரையும், வால்வோ பேருந்து 33 ரூபாய் முதல் 51 ரூபாய் வரையும் உயரும் என கூறப்படுகிறது. இந்த தகவல் தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |