தமிழ்நாடு மாநிலத்திற்கென கல்விக் கொள்கையை உருவாக்க டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் கல்விக் கொள்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்குவது தொடர்பாக பொதுமக்களிடம் ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையிலான குழு கருத்து கேட்கிறது.
தமிழ்நாட்டை 8 மண்டலங்களாக பிரித்து மாநிலம் முழுவதும் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இதில் பெற்றோர்கள் பங்கேற்று கருத்து தெரிவிக்க வேண்டும். மேலும், வரும் 26, 27 தேதிகளில் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.