மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தின் தூய்மை தலைநகராக மதுரை வண்டியூர் என்ற பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். அவர் நேற்று இரவு பணி முடிந்ததும் வீட்டுக்கு செல்லாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் உள்ள மொட்டை மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் இன்று காலை பணிக்கு வந்த சக பணியாளர்கள் மொட்டை மாடியில் வேல்முருகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இப்படி ஒரு சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது தமிழகம் முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.