வடகிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தற்போது ஒடிஷாவில் பாலசேர் துறைமுகத்திலிருந்து தென்கிழக்கில் 310 கிலோமீட்டர் தொலைவிலும், மேற்குவங்கம் திகா துறைமுகத்தில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவிலும், சாகர் தீவு தென்கிழக்கில் 210 கிலோமீட்டர் தொலை நிலைகொண்டுள்ள அது, புயலாக மாறி கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதன் எதிரொலியாக தமிழகத்தில் சென்னை, எண்ணூர், கடலூர், நாகை மற்றும் பாம்பன் ஆகிய துறை முகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இந்த புயலின் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மேகமூட்டத்துடன் காற்று வீசப்படும் என்று வானிலை மையம் தெரிவித்தது. ஆனால் ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் நேற்று இயல்பான நிலையே இருந்தது.