நாடு முழுவதும் உருமாறிய ஒமைக்ரான் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. ஒமைக்ரான் பரவுவதை தடுக்க, வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வரும் 15 ஆம் தேதியுடன் தமிழகத்தில் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் மற்றும் மேலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று உயர் அதிகாரிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
இதில் கொரோனா பரவாமல் கட்டுப்படுத்த புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில், தலைமை செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மருத்துவ உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்திற்கு பின்னர் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளது.