Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு…. 7.19 லட்சம் பேர் விண்ணப்பம்…..!!!

பொது வினியோக திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களுக்கு ரே‌ஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ரே‌ஷன் கடைகளில் விலையில்லா அரிசி, கோதுமை மற்றும் சர்க்கரை, பருப்பு, பாமாயில் போன்றவை குறைந்த விலையில் விற்கப்படுகிறது.  குடும்ப அட்டைகளுக்கு வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்கள் மட்டுமின்றி அரசின் சிறப்பு திட்டங்களின் கீழ் உதவித் தொகையும், பொங்கல் தொகுப்பும், வேட்டி- சேலை போன்றவையும் வழங்கப்படுகின்றன.

தமிழகத்தில் தற்போது திமுக ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் 15 நாட்களுக்குள் புதிய ரே‌ஷன் கார்டு விண்ணப்பித்தவருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி திமுக ஆட்சிக்கு வந்த மே மாதம் முதல் ஜூலை வரை புதிதாக ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு 7.19 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மே மாதத்தில் 1.2 லட்சம், ஜூன் மாதத்தில் 1.57 லட்சம், ஜூலையில் 2.61 லட்சம் பேர் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

Categories

Tech |