Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய பணியிடங்கள்…. விரைவில் தேர்வு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளிக்கல்வி நிர்வாகம் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளதால் கூடுதல் பதவிகள் உருவாக்கப்பட்ட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.தொடக்கக் கல்விக்கு மாவட்ட அளவில் தனியாக பொறுப்பு அலுவலர்கள் இல்லாததால் பணிகளில் தோய்வு ஏற்படுகிறது. அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளதால் அதனை தக்க வைக்கும் நோக்கத்தில் தொடக்கப் பள்ளி அளவில் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.

அதனைப் போலவே சிறுபான்மை பள்ளிகளை கண்காணிக்க ஏதுவாக பள்ளிகள் மற்றும் தொகுதி கல்வி அலுவலர்களின் எண்ணிக்கை அடிப்படையில் புதிய வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களை உருவாக்கவும் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடமும் உருவாக்கப்பட வேண்டும். பல பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது, மேலும் பள்ளிக் கல்வித் துறையின் நிர்வாக சீரமைப்புக்கு ஒப்புதல் வழங்கப்படுகின்றது.

எனவே புதிதாக 32 மாவட்ட கல்வி அலுவலர், 15 வட்டார கல்வி அலுவலர், பதினாறு தனி உதவியாளர், 86 கண்காணிப்பாளர் பணியிடங்கள் பள்ளிக் கல்வித் துறையில் ஏற்படுத்தப்படும். அதற்கான அரசாணை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.அதன்படி மொத்த மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்கள் எண்ணிக்கை 120 இல் இருந்து 152 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே புதிய பணியிடங்களுக்கு விரைவில் அலுவலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |