தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஜனவரி 31-ஆம் தேதி வரை மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதனால் மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பிப்ரவரி 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் வழக்கம் போல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாம் என்ற முடிவை வாபஸ் பெற வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மருத்துவர்களின் பரிந்துரையை ஏற்று பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் இயங்கும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்த நிலையில், இந்த அறிவிப்பை ரத்து செய்து இன்னும் சில நாட்களுக்கு பள்ளிகள் திறப்பதை தள்ளிவைக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை குறித்து தமிழக அரசு விரைவில் முடிவெடுக்கும் என்று கூறப்படுகிறது.