Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பாமாயில் உற்பத்தி அதிகரிப்பு…. ரூ.5.65 கோடி நிதி ஒதுக்கீடு…. அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் பாமாயில் சமையல் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் எண்ணெய் பனை சாகுபடியை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 5.65 கோடி நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இது குறித்து பேசிய வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், உள்நாட்டில் பாமாயில் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்திலும், தமிழக விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும் வகையிலும், எண்ணெய் பனை சாகுபடியை உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வடிகால் வசதியுடன் வளமான மண் இருப்பதால் நமது மாநிலம் எண்ணெய் பனை சாகுபடிக்கு மிகவும் ஏற்ற இடம் ஆகும். மேலும் கொள்முதல் விலைக்கு உத்தரவாதம், பூச்சி, நோய் தாக்குதல் அதிகம் இல்லாதது, 25 முதல் 30 வருடங்களுக்கு நிலையான மாத வருமானம், சாகுபடிக்கு தேவையான அனைத்து பணிகளுக்கும் அரசு மானியம் போன்ற காரணங்களால், எண்ணெய் பனை சாகுபடியானது தமிழகத்தில் குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகளில் சிறந்த மாற்றுப்பயிராக கருதப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |