தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை விட வேண்டும் என்று ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. பின்னர் நிலைமை படிப்படியாக சீரடைந்த காரணத்தினால் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு வந்து செல்கின்றனர் . இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மழையின் காரணமாக தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.
அதுமட்டுமில்லாமல் சுழற்சிமுறையில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்ததால் சனிக்கிழமையும் வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் திங்கள் முதல் வெள்ளி வரை 90% மாணவர்கள் பள்ளிக்கு வருகை தருகின்றனர். ஆனால் சனிக்கிழமை மட்டும் 25 சதவீத மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வருகின்றனர். இதனால் சனிக்கிழமை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளனர்.