தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது.
திருச்சி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது. இந்தப் போட்டிகள் கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக நடத்தப்படாமல் இருந்தது. தற்போது தொற்று குறைந்துள்ளதால் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் மீண்டும் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. அதாவது நாட்டுக்காக பாடுபட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர், அண்ணல் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், ஜவர்கலால் நேரு, மகாத்மா காந்தி போன்ற தலைவர்களின் சிறப்புகளை மாணவர்கள் புரிந்து கொள்ளும் விதமாக பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது.
இந்த போட்டிகள் கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறும். இந்த போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 5000, இரண்டாம் பரிசு ரூபாய் 3000 மற்றும் மூன்றாம் பரிசு ரூபாய் 2000 வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கு வெற்றி சான்றிதழ்களும் வழங்கப்படும். இந்த போட்டி குறித்த விவரங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கல்வி இணை இயக்குனர் மூலமாக சுற்றறிக்கை அனுப்பி தெரிவிக்கப்படும்.