தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளதால் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு, ஏப்ரல் 15ஆம் தேதி புனித வெள்ளிக்கு அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் சனிக்கிழமையும் விடுமுறை அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை அரசு ஏற்றால் எப்ரல் 14 முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். இந்தக் கோரிக்கையை அரசு ஊழியர்களும் முன்வைத்துள்ளனர்.