Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!!

தமிழகத்தில் கொரோனா 3-வதுஅலை தாக்கத்திற்கு பின் கடந்த மாதம் 1ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், பள்ளிகள் வாக்குப்பதிவு மையங்களாக செயல்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஆசிரியர்கள் தேர்தல் அலுவலர்களாகவும் பணியாற்றினர். இதன் காரணமாக தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தலுக்கு பின் பவழக்கம்போல மீண்டும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

தற்போது பொதுத் தேர்வுக்கான காலஅட்டவணையும் வெளியாகி உள்ளது. அதன்பின் பிற வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு தேர்வு கால அட்டவணை, செய்முறை தேர்வு தொடர்பான அட்டவணைகளையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. இவ்வாறு தேர்வு தேதிகள் வெளியாகி இருப்பதை அடுத்து மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அம்மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் மாசிமாதம் திருவிழாவையொட்டி மார்ச் 8ஆம் தேதியன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் இந்த திருவிழா கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முக்கியமான நிகழ்வான திருத்தேர் உலா மார்ச் 8ஆம் தேதி நடைபெறும். இதன் காரணமாக வருகிற 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஏப்ரல் 9-ஆம் தேதி சனிக்கிழமை பணி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |