Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில்…. அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்…..!!!!!!

ஆதிதிராவிடர் நலத்துறையால் நடத்தப்பட்டு வரும் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையைத் போக்க நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் ஆதிதிராவிடர் நலஆணையகம் அதற்கு பதில் அளித்துள்ளது. அது தொடர்பாக ஆணையத்தின் அறிக்கையில் “தமிழ்நாட்டில் அரசு ஆதிதிராவிடர் நலத்துறையால் நடத்தும் பள்ளிகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒன்று விழுப்புரம் ஆகும். ஆதிதிராவிடர் நலத்துறையில் 2021-22 ஆம் கல்வியாண்டில் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் காலிப் பணியிடம் -44, இடைநிலை ஆசிரியர்/காப்பாளர் காலிப்பணியிடம்- 456 ஆகும். இந்த வருடத்தில் ஓராசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கையானது 134.

சென்ற 29/10/2021 அன்று அரசு கடித (நிலை) எண்.76 /ஆதிந – 7/2021-1 நாள் 25/10/2021 அரசு கடிதத்தின் அடிப்படையில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் நீண்ட காலமாக பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்களை, ஓராசிரியர் பள்ளிகள், ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின்படி போதுமான ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகள் மற்றும் காலியாகவுள்ள விடுதிகளுக்கும் பணியிட மாறுதல் செய்ய அனுமதி வழங்கி அரசு ஆணையிட்டுள்ளதை தொடர்ந்து, நிர்வாக நலன் கருதி ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் தொடக்கப்பள்ளியில் காலியாகவுள்ள 94 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.

அத்துடன் 08/12/2021 அன்று ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் (Right to Education) விதிகளின் அடிப்படையில் உபரியாக கண்டறியப்பட்ட 101 இடைநிலை ஆசிரியர்களை தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது. இதன் காரணமாக ஓராசியர் பள்ளிகளின் எண்ணிக்கை மாநிலஅளவில் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிகளின் எண்ணிக்கை 134-லிருந்து 83 குறைந்தது. அதன்பின்  28/12/2021 மற்றும் 29/12/2021 போன்ற நாட்களில் நடைபெற்ற பொதுகாலந்தாய்வு பணியிட மாறுதலினாலும், 01/03/2022 அன்று இடைநிலை ஆசிரியர்களுக்கு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு வழங்கப்பட்டமையாலும் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிகளில் இந்த காலிப்பணியிடங்கள் ஏற்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையில் என்னென்ன அறிவிப்புகள் என்பதை விவரித்த அமைச்சர்:

மேற்குறிப்பிட்ட நிகழ்வினால் ஏற்பட்ட இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் கோரப்பட்டு இருக்கிறது.

விழுப்புரம் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கீழ்க்கண்டுள்ளவாறு ஓராசிரியர் பள்ளிகள் இருக்கின்றன.

கள்ளக்குறிச்சி மாவட்டம்

பள்ளியின் பெயர்-தற்போது மாணவர்களின் எண்ணிக்கை

# அரசு (ஆதிதிராவிடர் நல) தொடக்கப்பள்ளி, சேந்தநாடு- 66

# அரசு (ஆதிதிராவிடர் நல) தொடக்கப்பள்ளி, சேந்தமங்களம்- 117

# அரசு (ஆதிதிராவிடர் நல) தொடக்கப்பள்ளி, ஆதனூர்- 66

# அரசு (ஆதிதிராவிடர் நல) தொடக்கப்பள்ளி, மதியனூர்- 89

# அரசு (ஆதிதிராவிடர் நல) தொடக்கப்பள்ளி, பூ.மாம்பாக்கம்- 67

# அரசு (ஆதிதிராவிடர் நல) தொடக்கப்பள்ளி, ஓலையனூர்- 60 என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |