Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் புதிய மாற்றம்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை காரணமாக கடந்த மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பாதிப்பு குறைந்து வருவதைத் அடுத்து பிப்ரவரி 1 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கொரோனா தொற்று பரவல் முழுவதும் குறையாத நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம், பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.

இதனை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் கொரோனா விடுமுறை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட திருப்புதல் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில் இந்த கல்வியாண்டில் கட்டாயம் பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது பொதுத் தேர்வு நெருங்கி வரும் நிலையில், பாடங்களை விரைந்து முடிக்க பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டது.

ஆகவே தற்போது அனைத்து பள்ளிகளும் காலை, பிற்பகல் என்று முழு நேரமும் செயல்பட வேண்டும். அனைத்து பாட வேலைகளிலும் கட்டாயம் மாணவர்களுக்கு பாடங்களை தடையின்றி நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அந்தந்த மாவட்ட பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் ” பள்ளிகள் முழுநேரமும் செயல்பட வேண்டும்.

அதனை தொடர்ந்து மாணவர்களை முழு அளவில் பள்ளிக்கு வரவழைத்து பாடம் நடத்த வேண்டும். இதனிடையில் அரைநாள் மட்டும் பள்ளிகளை நடத்துவதும், ஓரிரு மணி நேரத்தில் மாணவர்களை வீட்டுக்கு அனுப்புவதும்போன்றவை  நடைபெற கூடாது. அவ்வாறு நடைபெற்றால் அப்பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் அனைத்தையும் குறிப்பிட்ட காலத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |