தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சில வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இதையடுத்து தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் அரசு அவசரம் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த ஆண்டு முதல் அலை கட்டுக்குள் வந்தவுடன் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்தபோது தஞ்சை மாவட்டத்தில் ஒரே பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொற்றுக்கு உள்ளாகினர். இதனால் மாணவர்களுக்கு தடுப்பூசி போட்ட உடன் பள்ளிகளை திறக்க வேண்டும் என.