Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. அரசு புதிய முடிவு…..!!!!

தமிழகத்தில் வரும் 20 ஆம் தேதிக்கு பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் பல மாநிலங்களில் பள்ளிகள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் நாளை முதல் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் தற்போதைய சூழலில் பள்ளிகள் திறப்பது பாதுகாப்பாக இருக்குமா? பெற்றோர்கள் மனநிலை குறித்து கருத்து கேட்கலாமா? என்பது குறித்து நாளை சுகாதார வல்லுநர்களுடன் அரசு ஆலோசனை நடத்த உள்ளது. இதையடுத்து ஜூலை 22 அல்லது அதற்கு அடுத்த ஒரு சில நாட்களில் உயர் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |