இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதற்கு மத்தியில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மட்டும் நடத்தப்படவில்லை என்பதால் முன்னதாக 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு தான் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நீடிக்கும் வரை பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பாதிப்பு முற்றிலும் குறைந்தாலும் மட்டுமே பள்ளி திறப்பது குறித்து முடிவு செய்யப்படும். தற்போதைய சூழ்நிலையில் கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்த பள்ளிகளை திறக்க ஆய்வு செய்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.