Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தடை…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போதும்  மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலமாகவும், கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் வகுப்புகள் வழக்கம் போல நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் 9 – 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம்போல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது. இதனையடுத்து கடந்த மாதம் 1-ம் தேதி முதல் தொடக்க மற்றும் நடுநிலை வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது.

இந்த நிலையில் மாணவர்களின் கல்வி நிலை பற்றி அறிய திருப்புதல் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் அரையாண்டு தேர்வுக்கு பதில் திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டது. அதன்பின் தேர்வு முடிவடைந்து விடுமுறை விடப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில் நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது தான் பள்ளிகள் திறக்கப்பட்டிருப்பதால் மீண்டும் விடுமுறை அளிக்கப்படுமா என்று எதிர்பார்த்து வந்தனர். இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை கவனத்திற்கு கொண்டு செல்லபட்டு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதனைதொடர்ந்து டிசம்பர் 25-ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை 9 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை நாட்களில் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அம்மாவட்ட பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் மீண்டும் 3-ம் தேதி வழக்கம்போல் பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறை வகுப்புகள் இன்றி முழுமையாக பள்ளிகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடுநிலை வகுப்புகளான 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 5-ம் தேதி முதல் மதிப்பீட்டு தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த தேர்வு தொடாபான கால அட்டவணை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

Categories

Tech |