Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பலி எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது… அதிர்ச்சி தகவல்..!!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது.

தமிழகத்தில் இன்று 8,449 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 9,71,384 ஆகும். சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 2,77,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,96,759.

இன்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 33 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 13,032 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 4,364 பேர் உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |