Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் பரபரப்பு…. துப்பாக்கியை காட்டி மிரட்டிய கொள்ளையன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை… போலீசார் அதிரடி!!

ஸ்ரீபெரும்புதூர் அருகே துப்பாக்கியை காட்டி மிரட்டிய கொள்ளையர்களில் ஒருவன் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளான்..

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே நேற்று காலை பேருந்துக்காக காத்திருந்த வயதான பெண்மணியிடம் 3 பவுன் நகைகளை பறித்து விட்டு 2 வடமாநில கொள்ளையர்கள் தப்பித்து செல்ல முயன்றனர்.. அப்போது பொதுமக்கள் விரட்டி பிடிக்கும் போது கை துப்பாக்கியை காட்டி சுட்டு விடுவேன் என்று பொது மக்களை மிரட்டி இருக்கிறார்கள். இது தொடர்பாக தகவலறிந்த காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில் 10 தனிப்படை அமைத்து 200க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து சென்றார்கள்..

இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் தென்னலூர் ஏரியில் துப்பாக்கிகளுடன் கொள்ளையர்கள் பதுங்கி இருப்பதாக மக்கள் தெரிவித்தனர்..தென்னலூர் ஏரியில் பதுங்கியிருந்த இளைஞர்களை பிடிப்பதற்கு போலீசார் திட்டமிட்டிருந்தார்கள்.. 5 ட்ரோன் கேமரா உதவியுடன் கொள்ளையர்களை பிடிப்பதற்கு பல்வேறு முயற்சியை மேற்கொண்டார்கள்.. கையில் துப்பாக்கியை வைத்திருந்ததால் அவர்களை சுட்டுக் கொல்லவும், திட்டமிட்டு பிடிப்பதற்கு முயற்சி செய்தார்கள்.. நேற்று இரவு முழுவதும் தேடி இருந்தார்கள்..

இந்த நிலையில் ஏரி பகுதியில் பதுங்கியிருந்த கொள்ளையர்களை பிடிக்கும் போது கொள்ளையன் ஒருவன் போலீசார் மோகன் தாஸை சுட்டுவிட்டு தப்ப முயன்றுள்ளான்.. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.. அதனை தொடர்ந்து மற்றொரு காவலரை சுட முயன்றபோது, பாதுகாப்புக்காக போலீஸார் அவனை என்கவுண்டர் செய்தனர்.. அதனைத்தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு அவனது சடலத்தை கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளனர்.. மற்றொரு கொள்ளையனை தற்போது 200க்கும் மேற்பட்ட போலீசார் தேடி வருகிறார்கள்..

இந்த விசாரணையில் கொல்லப்பட்டவன் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த முர்தசா என்பது தெரியவந்தது.. அவனிடமிருந்து நகைகள், துப்பாக்கி, 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.. மேலும் ஒரகடத்தில் டாஸ்மாக் ஊழியர் ரவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதும் இந்த கொள்ளை கும்பலா? எனவும் விசாரணை நடைபெற்றிருக்கிறது

Categories

Tech |