தமிழகத்தில் 2012-ம் ஆண்டு மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களால் பலர் பணி விலகிய நிலையில் தற்போது 12,000 பேர் ரூ.10,000 தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் மாதம் 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக சுமார் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் பயனடைவார்கள் எனவும் அரசு தெரிவித்துள்ளது.