தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நீட் தேர்வு நடைபெற உள்ளது என்பதும் இந்த தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை சரிந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழகத்தில் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 121617 என்றும் ஆனால் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத எழுத விண்ணப்பித்த மாணவ மாணவிகள் எண்ணிக்கை 112890 என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.