Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை(7.11.22) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. மக்களே தெரிஞ்சுக்கோங்க…. முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக  நாளை(7.11.22) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

நெல்லை

தாழையூத்து துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், மானூர் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன்புதூர், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம்புதூர், நாஞ்சான்குளம், தென்கலம், மதவக்குறிச்சி ஆகிய பகுதிகளில் வரும் 7ஆம் தேதி திங்கள்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

கன்னியாகுமரி

தெங்கம்புதூர், தோவாளை மின் வினியோக பகுதிகளில் பராமரிப்பு பணிகள் 7-ஆம் தேதி திங்கள்கிழமை நடக்கிறது. அதன்படி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஏழுசாட்டுப்பத்து, விவேகானந்தா கல்லூரி சாலை, சரவணந்தேரி, கிளாரட் நகர், கீழக்காட்டுவிளை, மேலக்காட்டுவிளை, சின்னணைந்தான் விளை ஆகிய இடங்களிலும், செண்பகராமன்புதூர், சமத்துவபுரம், பொய்கை அணை, மரப்பாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது.

கோட்டார் மின்பாதை மற்றும் மீனாட்சிபுரம் வினியோக பிரிவுக்கு உட்பட்ட தேரேகால்புதூர் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் வருகிற 7, 8 ஆகிய தேதிகளில் நடக்கிறது. அதன்படி 7ஆம் தேதி திங்கள்கிழமை இளங்கடை மேலபுதுத்தெரு, பாத்திமா தெரு, பாத்திமா கார்டன், மீனாட்சிபுரம் பிரிவுக்குட்பட்ட கே.பி.ரோடு, விநாயகர் தெரு, செட்டிகுளம் சந்திப்பு ஆகிய இடங்களிலும், 8ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தோப்பு வணிகர்தெரு, ஈத்தாமொழி பிரிவுக்குட்பட்ட வட்டக்கரை, தட்டான்விளை, வடக்குசூரங்குடி ஆகிய இடங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

Categories

Tech |