Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 20ஆம் தேதி முதல் – மிக மிக முக்கிய அறிவிப்பு …!!

தமிழகம் முழுவதும் இன்று காலை 9.30 மணிக்கு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின அதனை தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர 20ஆம் தேதி முதல்  இணையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.கலை, அறிவியல் படிப்புகளை பொருத்தவரைக்கும் இதற்கு ஒவ்வொரு கல்லூரியிலும் தனித்தனியாக மாணவர்கள் விண்ணப்பிக்கக் கூடிய ஒரு சூழல்தான் இருந்தது. தற்போது புதிய முயற்சியாக இணைய தளம் மூலமாக விருப்பப்படும் கல்லூரிகளுக்கு  விண்ணப்பிக்க கூடிய ஒரு புதிய முறையை தமிழக அரசு தற்போது அறிவித்திருக்கிறது.

இதன்படி தமிழகம் முழுவதும் உயர் கல்வித்துறையின் 109 அரசு அரசு கலைக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 92,000 பட்டப்படிப்புகள் உள்ளன, இதற்கு வழக்கமான 2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது. இதேபோல் தொழில்நுட்ப கல்லூரிகளான பாலிடெக்னிக் கல்லூரிகளில் மொத்தமாக 16790 இடங்கள் இருக்கின்றன. இதற்கு வழக்கமாக 30 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

தற்போது அறிவித்து இருக்கக்கூடிய இணைய தளங்களில் விண்ணப்பிக்கும் முறையில் ஒரே விண்ணப்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க கூடிய இந்த வசதிகள் இருக்கின்றன. இணையதளங்கள் என்னவென்றால் அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு www.tngasa.in, www.tndceonline.org  என்ற இந்த இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். அதேபோல் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு www.tngpptc.in, www.tngptc.com என்றஇணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

Categories

Tech |