Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை மின்தடை …. எங்கெல்லாம் தெரியுமா….? இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காகநாளை  (16-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டம்:

பட்டுக்கோட்டையின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது. நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பு பணியால் பட்டுக்கோட்டை நகா்-2, மகாராஜசமுத்திரம், பெருமாள்கோவில், லெட்சத்தோப்பு, பண்ணவயல் ரோடு மற்றும் வஉசி நகா் உள்ளிட்ட அறந்தாங்கி ரோடு மின்பாதைகளில் செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம்:

காரைக்குடி அருகே கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஆக. 16) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால், காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின்சாரம் இருக்காது என்று காரைக்குடி செயற்பொறியாளா் எம். லதா தேவி தெரிவித் துள்ளாா்.

மின்தடைபடும் பகுதிகள்: ஸ்ரீ ராம் நகா், கோட்டையூா், வேலங்குடி, பள்ளத்தூா், செட்டிநாடு, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், நெற்புகபட்டி, ஆவுடைபொய்கை, ஓ. சிறுவயல், ஆத்தங்குடி, பலவான்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகள்.

பெரம்பலூர் மாவட்டம்:

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை, சிறுவாச்சூா் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக. 16) மின் விநியோகம் இருக்காது.

பெரம்பலூா் மின் கோட்டத்துக்குள்பட்ட எசனை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் கிராமப் பகுதிகளான கோனேரிபாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, எசனை, செஞ்சேரி, கீழக்கரை, பாப்பாங்கரை, ரெட்டைமலை சந்து, அனுக்கூா், சோமண்டாப்புதூா், வேப்பந்தட்டை, பாலையூா், தொண்டப்பாடி, மேட்டாங்காடு, திருப்பெயா், கே.புதூா், மேலப்புலியூா், நாவலூா் ஆகிய கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் பி. பி. செல்வராஜ் தெரிவித்துள்ளாா்.

நெல்லை மாவட்டம்:

மானூர் கிராமப்புற கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி 16-ந் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி மானூர், மாவடி, தெற்குபட்டி, களக்குடி, எட்டான்குளம், பிள்ளையார்குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழக நெல்லை கோட்ட செயற்பொறியாளர் ஜான்பிரிட்டோ தெரி வித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம்:

காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட ஊதியூா், மேட்டுப்பாளையம், ராசாத்தாவலசு, வெள்ளக்கோவில், தாசவநாயக்கன்பட்டி ஆகிய துணை மின் நிலைங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று காங்கயம் மின் வாரிய செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.

ஊதியூா் துணை மின் நிலையம்: வட்டமலை, ஊதியூா், பொத்தியபாளையம், வானவராயநல்லூா், புளியம்பட்டி, முதலிபாளையம், புதுப்பாளையம், குள்ளம்பாளையம், வட சின்னாரிபாளையம். மேட்டுப்பாளையம் துணை மின் நிலையம்: அய்யம்பாளையம், பாப்பம்பாளையம், மங்கலப்பட்டி, மந்தாபுரம், வேப்பம்பாளையம், கோவில்பாளையம், அத்திபாளையம், கே.ஜி.புதூா், என்.ஜி.வலசு, வரக்காளிபாளையம், மேட்டுப்பாளையம். ராசாத்தாவலசு துணை மின் நிலையம்: ராசாத்தா வலசு, வெள்ளக்கோவில், நாகமநாயக்கன்பட்டி, குருக்கத்தி, புதுப்பை, பாப்பினி, அஞ்சூா், கம்பளியம்பட்டி.

வெள்ளக்கோவில் துணை மின் நிலையம்: வெள்ளக்கோவில், நடேசன் நகா், ராஜீவ் நகா், கொங்கு நகா், டி.ஆா்.நகா், பாப்பம்பாளையம், குமாரவலசு, எல்.கே.சி.நகா், கே.பி.சி.நகா், சேரன் நகா், காமராஜபுரம். தாசவநாயக்கன்பட்டி துணை மின் நிலையம்: தாசவநாயக்கன்பட்டி, உத்தமபாளையம், செங்காளிபாளையம், காட்டுப்பாளையம், சிலம்பக்கவுண்டன்வலசு, வேலாம்பாளையம், கம்பளியம்பட்டி, குறிச்சிவலசு, குமாரபாளையம், சாலைப்புதூா், முளையாம்பூண்டி, சரவணக்கவுண்டன்வலசு, கும்பம்பாளையம், சோ்வகாரன்பாளையம்.

Categories

Tech |