Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் நடிகர் விஜய்யின் முதல் தேர்தல் வெற்றி… இனி சரவெடி தான்…!!!!

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்தது. அதில் முதல் கட்ட வாக்குப் பதிவில் 77.43% மற்றும் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் 78.47% வாக்குகள் பதிவாகியுள்ளது.

இதற்காக 9 மாவட்டங்களில் 74 ஓட்டு மையங்கள் அமைக்கப்பட்டன. இதையடுத்து 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. பெரும்பாலான தொகுதிகளில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் ஊராட்சி வடப்பாடி நான்காவது ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ரீனா புருஷோத்தமன் வெற்றி பெற்றுள்ளார். மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் கருப்பட்டி தட்டை காந்திநகர் பகுதியில் முதல் வார்டில் போட்டியிட்ட பிரபு என்பவரும் வெற்றி பெற்றுள்ளார். இவர்கள் இருவருமே விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள்.

Categories

Tech |