Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் நடந்தது ”தேர்தல் அல்ல”…. ”மிகப்பெரிய மோசடி”… வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்க …. பெரும் பரபரப்பு

தமிழக தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால் வாக்கு எண்ணிக்கையை நடத்தக்கூடாது, தேர்தலை இரத்து செய்ய வேண்டும், தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகுவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

ஏறக்குறைய இருபது நிமிடத்திற்கு மேலாக எங்களுடைய ஆதங்கங்களை அவர் பொறுமையாகக் கேட்டார். இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எங்களுடைய கோரிக்கையை அனுப்பி வைப்பதாகவும் சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று எண்ணக்கூடிய வழக்கறிஞர்கள் இதற்க்கு ஆதரவு தந்து இருக்கின்றனர். எனவே தமிழகத்தில் தனி நபர்களோ, அல்லது அமைப்புகளோ, அரசியல் கட்சிகளோ, தமிழ்நாட்டில் சுதந்திரமான…

தூய்மையான தேர்தல் நடத்துவதற்கு யாரெல்லாம் ஆதரவு கொடுக்கிறார்களோ…. அவர்களை திரட்டி மிகப் பெரிய மக்கள் இயக்கம் நடத்தப்படும். இந்த ஆபத்துகள் இப்போதே தடுத்து நிறுத்த படவில்லை என்று சொன்னால் , எதிர்காலத்தில் உங்களை போன்ற இளைஞர்கள் அல்லது இந்த நாட்டிலே படித்து சமுதாய தொண்டு ஆற்ற வேண்டும் என்று வரக்கூடிய இளைஞர்கள் ஒரு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கூட போட்டியிட முடியாத நிலைமையில் ஏற்படும்.

ஒரு வார்ட் உறுப்பினராவதற்கு லட்சக்கணக்கான ரூபாய்….  கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்க கூடிய அவல நிலை வந்து விடும் . எனவே தான் நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். இப்போது நடைபெற்றது தேர்தலே கிடையாது. இது மிகப்பெரிய ஒரு மோசடியாக நடைபெற்றது. எனவே இந்த தேர்தலை  ரத்து செய்ய வேண்டும். மே 2ஆம் தேதி நடக்க கூடிய தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும்.  உடனடியாக தமிழகத்திலே ஜனாதிபதி ஆட்சி அமலாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கின்றோம் என கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

Categories

Tech |