Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி பயனாளிகளுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு……!!!!!

தமிழகத்தில் சென்ற 2021 ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பல வாக்குறுதிகளை அளித்தார். அந்த வகையில் அவர் ஆட்சிக்கு வந்ததும் முதல் 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் அடிப்படையில் கையெழுத்திட்டு அதை திட்டமாக செயல்படுத்தினார். அவற்றில் மகளிர் இலவச பேருந்து பயணம், ஆவின் பால் விலை குறைப்பு ஆகியவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து கூட்டுறவு வங்கிகளில் பெற்ற தங்க நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்ததையும் நிறைவேற்றும் அடிப்படையில் அதற்குரிய பணிகள் நடைபெற தொடங்கியது.

அப்போது நிபந்தனைகளின்படி தகுதி பெறுபவர்களுக்கு மட்டும் நகைக் கடன் தள்ளுபடி அளிக்க முடிவு செய்யப்பட்டு நகைக்கடன் பெற்றவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டது. அதன்படி நகைக் கடன் தள்ளுபடி பெற தகுதியானோர், தகுதியற்றோர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் பெரும்பாலானோர் தகுதியற்றோர் பட்டியலில் இருந்தனர். இதனால் எந்த வித நிபந்தைகள் இன்றியும் அனைவரது கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் அரசு அனுமதி வழங்கியதை அடுத்து நிபந்தனைகளின்படி தகுதியானவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி அளிக்கப்பட்டு வருகிறது.

இப்போது நாகை மாவட்டத்திலுள்ள கூட்டுறவு சங்கத்தில் கடன்பெற்ற 18412 நபர்களுக்கு நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அந்த மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார். அந்த வகையில் வேளாண் உற்பத்திளார்கள் கூட்டுறவு கடன் சங்கங்கள்-1, வேதாரண்யம் ஊரக வளர்ச்சி வங்கி -1,கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் – 9 என மாவட்டத்தில் உள்ள மொத்த 73 கூட்டுறவு நிறுவனங்களில் கடன் பெற்ற 18,412 நபர்களின் கடன் தொகை ரூபாய் 5371.27 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டு பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்பட்டு ள்ளது.

Categories

Tech |