திமுக தலைவர் மு க ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. திமுக அரசானது ஆட்சி அமைந்தவுடன் கண்மூடித்தனமாக கடனை தள்ளுபடி செய்து விடுவார்கள் என்று எண்ணி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மோசடிகள் நடந்துள்ளன. அவையாவன:- ஐந்து சசவரன்களாக பிரித்து அடகு வைத்து 340க்கும் மேற்பட்ட கடன்களை பெற்றுள்ளது, சில இடங்களில் 600க்கும் மேலாக ஒரு நபர் மட்டுமே கடனை பெற்றிருப்பது, கவரிங் நகைகளை வைத்து கடன் வாங்கியதும், சில இடங்களில் நகைகளை அடகு வைக்காமலே கடன் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
வங்கி அதிகாரி மற்றும் ஊழியர்களின் துணையின்றி மோசடிகள் நடைபெற வாய்ப்பில்லை. எனவே இந்த மோசடியின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பதை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி நடைபெற்றிக்க வாய்ப்பு உள்ளது. அமைச்சரின் துணையின்றி மோசடி நடைபெற்றிக்க வாய்ப்பில்லை. இதன் விசாரணையானது சிபிஐக்கு மாற்றப்படும் என தகவல் வெளிவந்துள்ளது. எனவே கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு இந்த மோசடியில் ஈடுபட்டு இருக்க வாய்ப்புகள் உள்ளது