Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தொழில் தொடங்க சாதகமான சூழல்…. குட் நியூஸ் சொன்ன முதல்வர் ஸ்டாலின்…..!!!!!

கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அதிலும் குறிப்பாக இளைஞர்கள் வேலையின்றி தவித்து வந்தனர். இதையடுத்து கொரோனா தாக்கம் சற்று குறைந்து வந்த நிலையில் அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க சாதகமான சூழல் இருப்பதாக துபாயில் இருந்து தாயகம் திரும்பிய நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் காகித கப்பல்கள் எனவும் அவர் விமர்சித்தார். துபாய் பயணத்தின்போது சுமார் 6000 கோடி மதிப்பீட்டில் போடப்பட்ட ஒப்பந்தம் மூலம் 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகப் போவதையும் அவர் பெருமிதத்துடன் சுட்டிக்காட்டினார்.

Categories

Tech |