Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தொடர் உச்சத்தில் கொரோனா பலி எண்ணிக்கை..!!

தமிழகத்தில் நேற்று  கொரோனா பலி எண்ணிக்கை 100 ஐ தாண்டியது. கொரோனா பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,950 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,38, 55 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 3-வது நாளாக நேற்றும்  கொரோனா பாதிப்பு 1000 கடந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,196 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1, 16, 650 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் 14வது நாளாக நேற்றும் பலி எண்ணிக்கை 100ஐ தாண்டியது. தமிழகத்தில் நேற்று மட்டும் 125 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதுவரை கொரோனவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,766 ஆக அதிகரித்துள்ளது.நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில்  54,019 பேருக்கு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று மற்றும் 6,019 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். தமிழகத்தில் இதுவரை 2,78, 270 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழக சுகாதாரத் துறை அளித்த தகவலின் படி, நேற்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 488 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 436 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 395 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Categories

Tech |