தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. இதையடுத்து தமிழகத்தில் திமுக ஆட்சியமைக்கிறது.
இந்நிலையில் 234 தொகுதிகள் & மக்களவை தொகுதிக்கான அதிகாரப்பூர்வ முடிவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி திமுக கூட்டணி 159 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் முக்கியமாக நோட்டாவுக்கு 0.75% வாக்குகள் கிடைத்துள்ளன. இது தேமுதிக, சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட சில கட்சிகளின் வாக்கு சதவீதத்தை விட அதிகமாகும். தேர்தல் முடிவுகளை results.eci.gov.in இன்று இணையத்தில் பார்த்துக்கொள்ளலாம்.