Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தேநீர் கடைகளுக்கு அனுமதி…. பாலகிருஷ்ணன் நன்றி…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில், உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் முன்தினம்  ஆலோசனை நடத்தினார். இதனை அடுத்து தமிழகத்தில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் ஜூன் 21-ஆம் தேதி வரை நீட்டிக்கபடுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் செயல்படும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நாளை முதல் தேநீர் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.அதன்படி காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை தேநீர் கடைகளை திறந்து பார்சல் முறையில் விற்பனை செய்யலாம். பார்சல் முறையில் தேனீர் பெற மக்கள் பாத்திரங்களைக் கொண்டு வந்து பெற்றுச் செல்ல வேண்டும். கடைகளின் அருகே நின்று மக்கள் தேநீர் அருந்த அனுமதியில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தேநீர் கடையை திறக்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று, முதல்வர் ஸ்டாலின் தேநீர் கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளார். அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |