Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே இல்லை… கே.பி. முனுசாமி அதிரடி பேச்சு…!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே இல்லை என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக விற்கு மட்டுமே நேரடி போட்டி. இங்கு தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே இல்லை என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி தெரிவித்துள்ளார். மேலும் நடைபெறவுள்ள தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக வெறுமனே சிரித்துக்கொண்டே விளையாடுபவர்கள் தான் என்று இரு தேசிய கட்சிகளும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறிய இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |