Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் துணை மின்நிலையங்கள் அமைக்கப்படுமா?…. அமைச்சரின் விளக்கம்….!!!!

தமிழகத்தில் துணை மின்நிலையங்கள் அமைப்பது தொடர்பாக அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி மானாமதுரை பகுதியில் துணை மின் நிலையம் அமைக்கப்படுமா என கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கு அரசு நிலங்கள் இருக்கிறதா என்பது குறித்து முதலில் ஆய்வு செய்யப்படும். இதன்மூலம் வருவாய் இழப்புகளை தவிர்க்கலாம் என முதலமைச்சர் கூறியுள்ளார். இதனையடுத்து அரசு அல்லாத தனியார் நிலங்களிலும் துணை மின் நிலையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். எனவே நல்லாண்டிபுரம் பகுதியில் துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணி நடைபெறும் என கூறினார். இதனையடுத்து சட்டப்பேரவை உறுப்பினர் ஜோசப் சாமுவேல் அம்பத்தூரில் துணை மின் நிலையம் அமைக்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் துறை வாரியாக ஆய்வு செய்து 216 துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சீரான மின் வினியோகம் இதற்காக எந்தெந்த பகுதிகளில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்பதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது என்றார். இதைத்தொடர்ந்து அசன் மௌலானா வேளச்சேரியில் 250 டிரான்ஸ்பார்மர்கள் மட்டுமே உள்ளது. இங்கு 500 டிரான்ஸ்பார்மர்கள் இருந்தால் மட்டுமே சீரான மின் விநியோகம் நடைபெறும் என்றார். இதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னையில் 12 இடங்களில் துணை மின் நிலையம் அமைப்பதற்கான ஆணையை முதலமைச்சர் வழங்கியுள்ளார். மேலும் இந்த ஆண்டு வேளச்சேரியில் துணை மின்நிலையம் அமைக்கப்படும் எனவும் கூறினார்.

Categories

Tech |