Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தீவிர ஊரடங்கு…. 144 தடை…. அரசு பரபரப்பு உத்தரவு….!!!

இந்தியாவில் சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார துறை இணைச் செயலாளர் லால் அகர்வால் இந்த தகவலை தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா திடீரென்று அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தேவைப்பட்டால் பெரிய அளவில் மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்க மாநில அரசுகள் 144 தடை, இரவு நேர ஊரடங்கு போன்றவற்றை நடைமுறைப்படுத்தலாம் என்றும், கொரோனா தடுப்பு விதிகளை தீவிரமாக அமல்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 961 ஆக அதிகரித்துள்ளது. இதில் 320 பேர் குணமடைந்துள்ளனர். எனவே மாநில அரசுகள் தேவைப்பட்டால் சூழலுக்கு ஏற்ப 144 தடை உத்தரவை அமல்படுத்தலாம் என்று மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லால் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |