Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தீபாவளி பட்டாசு விற்பனைக்கு தடை…? வெளியான முக்கிய தகவல்….!!!!

அக் 24 ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக வெளியூர்களிலிருந்து மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பி தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் பட்டாசு வெடித்தும், பலகாரங்கள் செய்தும் கொண்டாடி மகிழ்வார்கள். இந்த நிலையில் பட்டாசு விற்பனை, பட்டாசு வெடிப்பதற்கான கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை குறித்து வரும் 28ஆம் தேதி தமிழக அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடுகள், தடை செய்யப்பட்ட சீன பட்டாசு விற்பனை கண்காணிப்பது, பசுமை பட்டாசுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது உள்ளிட்டவை குறித்து வரும் 28 ஆம் தேதி அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது.

Categories

Tech |