தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையில் திமுக இரட்டை வேடம் போடுவதாக பாஜக தலைவர் முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் ஒருவரை ஒருவர் விமர்சித்து தீவிர பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே பெரும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டு கட்சிகளையும் கடுமையாக விமர்சிக்கும் வகையில் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனையடுத்து புதிய கல்விக் கொள்கையில் திமுக இரட்டை வேடம் போடுவதாக பாஜக தலைவர் எல். முருகன் கூறியுள்ளார். திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் நான்கு முதல் ஐந்து மொழிகள் கற்பிப்பதாகவும், அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு இன்னொரு மொழியை கற்பிக்க அனுமதிப்பதில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியின் வலிமையாக இருப்பதாகவும் கூறினார்.