கொரோனா ஊரடங்கு காலத்தில் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு, அழைக்கப்பட்டு, மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கின்றனர். பொதுத்தேர்வு எழுதி உயர்கல்வி செல்லும் வேண்டும் என்ற நோக்கோடு இருக்கும் மாணவர்களுக்கு இந்த ஊரடங்கு கல்வியில் பெருத்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனை சரிசெய்யும் வகையில் தமிழக அரசாங்கம் கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக கல்வி தொலைக்காட்சி காண பாட கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு டிவி மூலம் காலை 6 – இரவு 8.30 வரை நடத்தப்படும் பாடங்கள், ஒளிபரப்பு அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி கல்வி தொலைக்காட்சியில் காலை 6 மணிக்கு நீட், ஜேஇஇ படிப்புகளுக்கு பாடம் நடத்தப்பட உள்ளது. 7 – 8 மணி வரை இயற்பியல், 8 – 8.30மணி வரை பத்தாம் வகுப்பு தமிழ் 8.30 – 9 மணி வரை பத்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடம் நடத்தப்பட உள்ளது.