தமிழகத்தில் எப்படியாவது தாமரையை மலரச் செய்துவிட வேண்டும் என்று பாஜக முனைப்பு காட்டி வருகிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டாலும் கூட்டணி இறுதி செய்யப்பட்டு தேர்தலில் களம் கண்டது. ஆனால் தேர்தல் தோல்விக்குப் பின்னர் பாஜக கூட்டணி குறித்து அதிமுக தலைவர்கள் வெளிப்படையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் நடைபெற 9 மாவட்ட ஊரக பகுதிகளுக்கு செப்டம்பர் 15-ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது.
இதையடுத்து உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அடுத்தடுத்த கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர். தேர்தலுக்கு தயாராவது குறித்து பாஜக மாவட்ட தலைவர்களுடன் பாஜக தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார். அப்போது பாஜக கூட்டணி கட்சிகள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்ற கடுமையாக உழைக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் என்று தொடர்ச்சியாக ஓய்வு இல்லாமல் பணி செய்வதை போல உள்ளாட்சித் தேர்தலிலும் ஓய்வில்லாமல் உழைக்க வேண்டும். தொடர்ந்து உழைத்தால்தான் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமையும் என்று தெரிவித்துள்ளார்.