தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என பாஜக ஆதரவாளரான குஷ்பூ உறுதியாக கூறியுள்ளார்.
பாஜகவின் ஆதரவாளரான நடிகை குஷ்பூ முதலமைச்சர் பழனிச்சாமியின் தாய் மறைவிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது “பிரதமர் மோடி அவர்கள் செய்யும் நன்மைகளை கவனிக்காமல் அவரது கண்ணாடி மற்றும் உடையை மட்டுமே பலரும் பார்க்கின்றனர். 2021 ஆம் ஆண்டு வரும் சட்டமன்றத் தேர்தல் மிக மிக முக்கியமான தேர்தலாக பாஜகவிற்கு அமையும். நிச்சயம் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்” எனக் கூறினார்.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்த குஷ்பு காங்கிரஸில் தனது கருத்துக்கு மதிப்பு இல்லை என்றும் உயர் பதவியில் இருப்பவர்கள் தன்னை ஒடுக்கியதாகவும் குற்றம் சுமத்தினார். அதேநேரம் பிரதமரின் திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என புகழாரம் சூட்டியுள்ளார். இருக்கும் இடத்திற்கும், இருக்கும் கட்சிக்கும் ஏற்றபடி பேசுவதுதான் அரசியலின் உண்மையான இயல்பு என்று வெளிப்படையாக கூறிய குஷ்பூ தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர்களை விமர்சனம் செய்து வருகிறார்.