தமிழகத்தில் தமிழ் மொழியை கற்க கூடாதா என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மொழிகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. தற்போது மும்மொழி கொள்கை பற்றி பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளை கற்கலாம், ஆனால் தமிழகத்தில் தமிழ் மொழியை கற்க கூடாதா? என்று கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழ் கற்பிக்கப்படும் என திருத்தம் கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் தமிழ் மொழியை ஊக்கப்படுத்த வேண்டும் என்கிறார் பிரதமர். ஆனால் இந்தி மற்றும் ஆங்கிலம் படிக்க கட்டாயப்படுத்துகின்றனர் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.