வட இந்தியாவைச் சேர்ந்த சிறுவன் தமிழ் மொழியில் சாதனை படைத்துள்ளான்.
சென்னையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டை, ராயபுரம், சௌகார்பேட்டை, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒப்பனக்கார வீதி, மதுரையில் உள்ள சில பகுதிகளில் வட இந்தியர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் தமிழர்கள் அடித்தட்டு மக்களாக வசித்து வரும் நிலையில் வட இந்தியர்கள் முதலாளிகளாக இருக்கின்றனர். இப்படி வட இந்தியர்கள் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் தமிழ் மட்டுமே தமிழர்களுக்கு என்றும் நிரந்தரம் என்று இருந்தது. இந்நிலையில் வட இந்தியாவைச் சேர்ந்த ரிஷப் குமார் என்ற மாணவன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார்.
இந்த சிறுவன் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் 87 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இவர் 500க்கு மொத்தம் 461 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியிலே முதன் மாணவனாக வந்துள்ளார். இந்த சிறுவனின் தமிழ் கையெழுத்து தான் பள்ளியிலே சிறந்த கையெழுத்து என்றும் தலைமை ஆசிரியர் கூறுகிறார். இதனையடுத்து தமிழ் மொழியில் வட இந்தியாவை சேர்ந்த சிறுவன் சிறந்து விளங்கினாலும் தமிழகத்தில் தமிழர்களின் உரிமைகள் பறிபோவதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் தமிழர்கள் இதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு தமிழகத்தில் தங்களுடைய நிலையை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.