தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஒரு சில கூடுதல் கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் கொரோனாவை எதிர்கொள்ள தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்பதால் மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன. தற்போது வரை 18 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், இந்த வாரம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற 15ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் சனிக்கிழமை வழக்கம்போல் முகாம் நடைபெறும் என்று அமைச்சர் சற்றுமுன் அறிவித்துள்ளார்.