Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தகைசால் மற்றும் மாதிரி பள்ளிகள்…. எந்தெந்த மாவட்டங்களில் தொடங்கப்படுகிறது தெரியுமா…..? இதோ முழு விபரம்….!!!

சென்னையில் உள்ள பாரதி பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். இவர் தமிழக முதல்வர் ஸ்டாலினின் முன்னிலையில் 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரிப் பள்ளிகளை தொடங்கி வைத்தார். இந்த தகைசால் பள்ளிகள் மாணவர்கள் பாடத்திட்டத்தை கடந்து முழுமையான கல்வியை வழங்கிடும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ளது. அதன்பின் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வி, நுன்கலை, விளையாட்டு துறைகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை வழங்கும் நோக்கத்தில் மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள், வசதிகள் மற்றும் பள்ளி தலைமை மட்டுமே மாணவர்களின் கற்றலுக்கும், திறன் வெளிப்பாட்டிருக்கும் உதவும். பள்ளிகளின் வசதியை மேம்படுத்துதல் மற்றும் ஆசிரியர் மாணவர்களுக் கிடையேயான கற்பித்தல் திறனை ஊக்கப்படுத்துதல் மட்டுமே மாணவர்களின் முன்னேற்றத்திற்கான முக்கிய காரணி ஆகும். இந்த இலக்கை அடைய வேண்டும் என்றால் ஒரு பள்ளியில் இலக்கியம், விளையாட்டு, கலைகள், ஒருங்கிணைந்த நூலகம் மற்றும் பாடத்திட்டங்கள் போன்றவைகள் முழுமையாக இடம் பெற வேண்டும். அதோடு ஆசிரியர்களுக்கு நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் கொடுக்கப்படும் பயிற்சிகள் மூலம் மாணவர்கள் வருங்காலத்தில் நல்ல நிலைமையை அடைய முடியும்.

அதன்பிறகு மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்காக தமிழகத்தில் உள்ள திருப்பூர், கிருஷ்ணகிரி, அகத்தீஸ்வரம், திருநெல்வேலி, கோவில்பட்டி, மதுரை, திருபுவனம், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், கடலூர், திருச்சி, குளித்தலை, பழனி, கோயம்புத்தூர் மற்றும் கூடலூர் பகுதிகளில் தகைசால் பள்ளிகள் தொடங்கப்பட இருக்கிறது. மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப ஒவ்வொரு பள்ளியிலும் நவீன வகுப்பறைகள் உருவாக்கப்படும். இந்த தகைசால் பள்ளிகள் மூலம் ஆறாம் வகுப்பு முதல் மாணவர்கள் தங்களுடைய கற்றல் திறன்களை வளர்த்துக் கொள்ள முடியும்.

இதனையடுத்து ராணிப்பேட்டை, நாகப்பட்டினம், வேலூர், திருவள்ளூர், ராமநாதபுரம், ஈரோடு, சிவகங்கை, திருவாரூர், நீலகிரி, திருப்பத்தூர், மதுரை மற்றும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் 15 அரசு பள்ளிகளில் மாதிரி பள்ளிகள் தொடங்கப்படும். இந்த மாதிரி பள்ளிகள் மூலம் மாணவர்கள் தங்களுடைய தனித்திறனை வளர்த்துக்கொண்டு தொழில் வாய்ப்புகளை மேற்கொள்வது தொடர்பான விழிப்புணர்வுகளை பெற்றுக் கொள்ள முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |