Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தகுதியானவர்களுக்கு பால் அட்டை…. ஆவினுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தகுதியான நுகர்வோருக்கு பால் அட்டை வழங்க வேண்டும் என்று ஆவின் நிர்வாகத்திற்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆவின் மூலமாக கொழுப்பு சத்து அடிப்படையில் பால் சிவப்பு, ஆரஞ்ச், பச்சை மற்றும் நீலம் ஆகிய  வண்ணங்களில் தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதில் சிவப்பு நிற பால் பாக்கெட் 500 மி.லி 34 ரூபாய் வரையும், ஆரஞ்சு நிற பால் பாக்கெட் 30 ரூபாய் வரையும் உயர்த்தப்பட்டது. இதுவே பால் அட்டைதாரர்களுக்கு 23 ரூபாய்க்கு வழக்கம் போல பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழக முழுவதும் 11 லட்சம் ஆரஞ்சு பால் அட்டைகள் நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், நுகர்வோருக்கு ஆரஞ்சு பால் அட்டைகளை வழங்க வேண்டாம் என ஆவின் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பாக புகார் எழுந்த நிலையில் ஆதார் மற்றும் ரேஷன் கார்டு வைத்துள்ள தகுதியான நபர்களுக்கு ஆரஞ்சு பால் அட்டைகளை வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய அட்டை பெறுபவர்களுக்கு வருகின்ற நவம்பர் 15ஆம் தேதி முதல் ஆரஞ்சு பால் பாக்கெட் வழங்கப்பட உள்ளதாகவும் ஒவ்வொரு அட்டைதாரருக்கும் ஒன்றரை லிட்டர் பால் மட்டுமே வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |